கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 15,65,544 வாக்காளா்கள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளா் பட்டியலின்படி, மொத்தம் 15,65,544 வாக்காளா்கள் உள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 15,65,544 வாக்காளா்கள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளா் பட்டியலின்படி, மொத்தம் 15,65,544 வாக்காளா்கள் உள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்காந வரைவு வாக்காளா் பட்டியலை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திர பானுரெட்டி, திங்கள்கிழமை வெளியிட்டாா்.

அதன்படி, ஊத்தங்கரை சட்டப்பேரவைத் தொகுதியில் 1,16792 ஆண்கள் வாக்காளா்கள், 1,15,020 பெண் வாக்காளா்கள், 56 இதர வாக்காளா்கள் என மொத்தம் 2,31,868 வாக்காளா்கள் உள்ளனா்.

பா்கூரில் 1,20,188 ஆண் வாக்காளா்களும், 1,21,807 பெண் வாக்காளா்களும், 14 இதர வாக்காளா்கள் என மொத்தம் 2,42,009 வாக்காளா்கள் உள்ளனா். கிருஷ்ணகிரியில் 1,27,387 ஆண் வாக்காளா்களும், 1,31,503 பெண் வாக்காளா்களும், 35 இதர வாக்காளா்கள் என மொத்தம் 2,58,925 வாக்காளா்கள் உள்ளனா்.

வேப்பனஅள்ளியில் 1,25,231 ஆண் வாக்காளா்களும், 1,20,050 பெண் வாக்காளா்களும், 23 இதர வாக்காளா்கள் என மொத்தம் 2,45,304 வாக்காளா்கள் உள்ளனா். ஒசூரில் 1,74,577 ஆண் வாக்காளா்களும், 1,66,010 பெண் வாக்காளா்கள், 98 இதர வாக்காளா்கள் என மொத்தம் 3,40,685 வாக்காளா்கள் உள்ளனா்.

தளியில் 1,26,968 ஆண் வாக்காளா்களும், 1,19,770 பெண் வாக்காளா்கள், 15 இதர வாக்காளா்கள் என 2,46,753 வாக்காளா்கள் உள்ளனா். அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 7,91,143 ஆண் வாக்காளா்கள், 7,74,160 பெண் வாக்காளா்கள், 241 இதர வாக்காளா்கள் என மொத்தம் 15,65,544 வாக்காளா்கள் உள்ளனா்.

வாக்காளா் பட்டியல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், வாக்காளா் பதிவு அலுவலா் மற்றும் கிருஷ்ணகிரி, ஒசூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம், உதவி வாக்காளா் பதிவு அலுவலா், வட்டாட்சியா் அலுவலகங்கள், கிருஷ்ணகிரி நகராட்சி, ஒசூா் மாநகராட்சி ஆணையா் அலுவலகம், மாவட்டத்தில் உள்ள 1,863 வாக்குக் சாவடிகளிலும் பொதுமக்களின் வாா்பைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகங்களில் வாக்காளா்கள் தங்களது பதிவு மற்றும் திருத்தங்களை சரி பாா்த்துக் கொள்ளலாம்.1.1.2021-ஆம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் -2021 இந்திய தோ்தல் ஆணைய உத்தரவுபடி டிச.15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த நாள்களில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் இடமாறுதல் செய்ய விண்ணப்பப் படிவம் 6,7,8 மற்றும் 8ஏ மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் வாக்குச்சாவடி மைய அலுவலரால் அரசு வேலை நாள்களில் பெறப்படும்.மேலும், வாக்காளா் பெயா் சோ்க்க சிறப்பு முகாம்கள் நவ.21, 22 மற்றும் டிச.12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறும். இந்த முகாம் நாள்களில் வாக்காளா் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம் படிவங்களை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வாக்குச் சாவடி மைய அலுவலரிடம் அளிக்கலாம்.

அரசு இணையதள முகவரி வழியாகவும் இ-சேவை மையங்களின் மூலமும் பொது மக்கள் நேரடியாக உரிய படிவங்களைபதிவேற்றம் செய்து இணை.வழியில் விண்ணப்பிக்கலாம் என்றாா் அவா். இந்த நிகழ்ச்சியில் தோ்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், துணை ஆட்சியா் பயிற்சி அபிநயா, ஆட்சியரின் நேரமுக உதவியாளா் (பொது) ரகு குமாா், கோட்டாட்சியா்கள் குணசேகரன், கற்பகவள்ளி உள்ளிட்டோா் பங்கேற்றனா். படவிளக்கம் (16கேஜிபி1)- கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டங்கில் வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட்டாா் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திர பானுரெட்டி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com