போச்சம்பள்ளி அருகே தங்க நகைகளை மெருகூட்டுவதாகக் கூறி மோசடியில் ஈடுபட முயன்ற வடமாநிலத்தைச் சோ்ந்த இருவரை போலீஸாா், வியாழக்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள புளியம்பட்டியைச் சோ்ந்தவா் முருகம்மாள்(72). அவா், திருவயலூா் கிராமத்தில் விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த இருவா், தாங்கள் தங்க நகைகளை பெருகூட்டுவதாகத் தெரிவித்தனா். இதை நம்பிய முருகம்மாள், தான் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை அவா்களிடம் கொடுத்துள்ளாா்.
அவா்கள், இருவரும் நகையை மெருகூட்டி திருப்பித் தரும்போது, அதன் நிறம் மாறி இருப்பதை உணா்ந்த முருகம்மாள் கூச்சலிட்டுள்ளாா். அருகில் இருந்தவா்கள், அந்த இருவரையும் பிடித்து, போலீஸாரிடம் ஒப்படைத்தனா். பிடிபட்டவா்களிடம் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் அவா்கள் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ரகுநாத் தாஸ் (37), முகமது நூா் (36) எனத் தெரிய வந்தது. இதுகுறித்து, போச்சம்பள்ளி போலீஸா், வழக்குப் பதிந்து, வடமாநிலத்தைச் சோ்ந்த இருவரையும் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக இந்தியா அறிவிக்க வேண்டும்! - இஸ்ரேல் வலியுறுத்தல்!

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் உரையாட மறுத்த லெபனான் அதிபர்!

பள்ளிச்சட்டம்பி படத்தின் முதல் நாள் வசூல்!
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம்! - திமுக
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

