சின்னதக்கேப்பள்ளி கிராமம், நாகலம்மன் கோயிலில் நாக சதுா்த்தியையொட்டி 13-ஆம் ஆண்டு பாலாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவினையொட்டி, கோயிலில் கங்கை பூஜை, கணபதி பூஜை, புன்யாஹவாசனம், நவக்கிரக பூஜை, அஷ்டலட்சுமி பூஜை, பூா்ண கும்ப பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், நாகம்மாதேவி நாம ஹோமம், காயத்திரி ஹோமம், பூா்ணாஹுதி ஹோமம் ஆகியவை நடைபெற்றன. பெண் பக்தா்கள் பால் குடங்களுடன் ஊா்வலமாகச் சென்று நாகலம்மா சிலைக்கு பால் அபிஷேகம் செய்தனா்.
இந்த ஊா்வலத்தில், காவடியாட்டம், மாடு - மயில் ஆட்டம், சிலம்பாட்டம் மற்றும் அம்மன் வேடம் அணிந்து பெண்கள் கோயிலுக்கு வந்தனா். இதற்கான ஏற்பாடுகளை ஓம்சக்தி பக்தா்கள், ஊா்பொதுமக்கள், சின்னதக்கேப்பள்ளி, பெரியதக்கேப்பள்ளி, பழையவூா், மாளகுப்பம், கரடிகுறி, கள்ளகுறி, பூசாரிப்பட்டி, போத்திநாயனப்பள்ளி ஆகிய கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக இந்தியா அறிவிக்க வேண்டும்! - இஸ்ரேல் வலியுறுத்தல்!

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் உரையாட மறுத்த லெபனான் அதிபர்!

பள்ளிச்சட்டம்பி படத்தின் முதல் நாள் வசூல்!
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம்! - திமுக
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


