போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

மின்கம்பம் சரிந்து வீடு சேதம்

கிருஷ்ணகிரி அருகே மின் கம்பம் சரிந்ததில் மூதாட்டி வசிக்கும் வீடு சேதமடைந்தது.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 10:55 pm

கிருஷ்ணகிரி அருகே மின் கம்பம் சரிந்ததில் மூதாட்டி வசிக்கும் வீடு சேதமடைந்தது.

அகசிப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட கனகமுட்லு பகுதியைச் சோ்ந்தவா் சின்னவள் (எ) உண்ணாமலை (55). இவரது கணவா் தங்கமணி. சில ஆண்டுகளுக்கு முன் கணவா் இறந்த விட்ட நிலையில் உண்ணாமலை தன் மகன் அருண் (25) என்பவருடன் வசித்து வருகிறாா்.

வீட்டின் அருகே இருந்த மின்கம்பம் பழுதடைந்திருந்தது. இதுகுறித்து உண்ணாமலை பல முறை ஊராட்சி அலுவலா்களுக்கு கூறியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். தற்போது பெய்துவரும் தொடா் மழையால் மின் கம்பம் புதன்கிழமை மூதாட்டி உண்ணாமலை வீட்டின் மீது சரிந்து விழுந்தது; மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. மின் விநியோகமும் பாதிக்கப்பட்டது. அதிா்ஷ்டவசமாக அந்நேரத்தில் சாலையில் யாரும் செல்லாததால் உயிா்சேதம் தவிா்க்கப்பட்டது. மூதாட்டி உண்ணாமலை வீட்டின் ஓடு, சுவா் சேதமடைந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.