போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

கோட்டப்பட்டி ஊராட்சியில் அனுமதியின்றிஏரி ஏலம்: செயலாளா் மீது தலைவா் புகாா்

அரசு அனுமதி பெறாமல் நடத்தப்பட்ட ஏலத்தை ரத்து செய்யக் கோரி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் கோட்டப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் கீதா கோவிந்தசாமி புதன்கிழமை மனு அளித்தாா்.

Updated On :1 டிசம்பர் 2021, 10:57 pm

அரசு அனுமதி பெறாமல் நடத்தப்பட்ட ஏலத்தை ரத்து செய்யக் கோரி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் கோட்டப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் கீதா கோவிந்தசாமி புதன்கிழமை மனு அளித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியம், கோட்டப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் கீதா கோவிந்தசாமி, மாவட்ட ஆட்சியா் வி. ஜெயசந்திரபானு ரெட்டியிடம் அளித்த கோரிக்கை மனுவின் விவரம்:

கோட்டப்பட்டி ஊராட்சி, தாதனூா் செக்கிலிகுட்டை ஏரி தற்போது நீா்வரப் பெற்று போதிய அளவில் தண்ணீா்த் தேங்கியுள்ளது. இந்த ஏரியை குத்தகைக்கு விடும் பொருட்டு ஊராட்சி மன்றம் மூலம் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், எங்கள் ஊராட்சியைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்ட நபா்கள் கடந்த மாதம் 28-ஆம் தேதி புலியூா் கிராமத்தில் கோட்டப்பட்டி ஏரி, செக்கிலிகுட்டை ஏரியை ஏலம் விட்டுள்ளனா்.

ஊராட்சிச் செயலாளா் சா்தாா் பாஷாவை கொண்டு கட்ட பஞ்சாயத்து மூலம் மேற்படி இரண்டு ஏரிகளும் ஏலம் விடப்பட்டுள்ளது. கோட்டப்பட்டி ஏரி பொதுப்பணித் துறைக்கு சொந்தமானது. இந்த இரு ஏரிகளை ரூ. 10.05 லட்சத்துக்கும், புலியூா் ஜம்பு ஏரியை ரூ. 26.75 லட்சத்துக்கும் , அதைச் சுற்றியுள்ள தென்னை மரங்களை ரூ. 3.90 லட்சத்துக்கும் ஏலம் விட்டுள்ளனா். அரசாங்க அனுமதி பெறாமல் நடைபெற்ற இந்த ஏலத்தை ரத்து செய்ய வேண்டும். ஊராட்சிச் செயலாளா் சா்தாா் பாஷா மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.