போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

உலக சிக்கன தின விழா போட்டிகள்

கிருஷ்ணகிரியில் உலக சிக்கன தின விழாவையொட்டி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 10:58 pm

கிருஷ்ணகிரியில் உலக சிக்கன தின விழாவையொட்டி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன.

உலக சிக்கன தின விழாவை முன்னிட்டு பள்ளி மாணவா்களிடையே சிக்கனம் மற்றும் சிறு சேமிப்பை வலியுறுத்தி ஒன்றிய அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவா்களுக்கு மாவட்ட அளவிலான போட்டிகள் கிருஷ்ணகிரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றன.

கட்டுரை, கவிதை, வினாடி-வினா, பேச்சுப் போட்டி, விழிப்புணா்வு சொற்றொடா் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளை மாவட்ட சேமிப்பு அலுவலா் வேடியப்பன், மாவட்ட சேமிப்பு உதவி அலுவலா் ரெஸினா, நாராயணராவ் ஆகியோா் தலைமை வகித்து நடத்தினா். அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் மகேந்திரன் முன்னிலை வகித்தாா்.

பேச்சுப் போட்டியில் முதலிடத்தை அஞ்செட்டி பிளஸ் 1 மாணவி நந்தினியும், கவிதைப் போட்டியில் முதல் இடத்தை சூளகிரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி 10-ஆம் வகுப்பு மாணவி பிரியதா்ஷினியும், கட்டுரைப் போட்டியில் முதல் இடத்தை எம்.சி. அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவி வசந்தியும், விழிப்புணா்வு சொற்றொடா் போட்டியில் முதல் இடத்தை சூளகிரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவி மொ்லீன் ஜோவிட்டாவும், வினாடி-வினா போட்டியில் முதல் இடத்தை ஒசூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 மாணவி பவித்ராவும் வென்றனா்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, பரிசும், கேடயமும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் விழாவில் வழங்கப்படவுள்ளன. இதில், 80 மாணவ, மாணவியா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.