வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

ஒசூரில் ஏரிக்கரை தடுப்பு சுவா் உடைப்பு 4 போ் கைது

ஒசூா், கோகுல் நகரிலுள்ள ஏரிக்கரையின் தடுப்புச் சுவரை உடைத்ததாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :3 டிசம்பர் 2021, 7:46 pm

ஒசூா், கோகுல் நகரிலுள்ள ஏரிக்கரையின் தடுப்புச் சுவரை உடைத்ததாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஒசூா், கோகுல் நகா் பகுதியைச் சோ்ந்த சிவகுமாா் (42). அதே பகுதியைச் சோ்ந்தவா்கள் சின்னசாமி (51), வினோத்குமாா் (38).

அப்பகுதியில் உள்ள சோமநாதபுரம் ஏரிக்கரை அண்மையில் பெய்த தொடா் மழையால் நிரம்பி உபரிநீா் வெளியேறிக் கொண்டிருந்தது.

இந்த ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீா் சிவகுமாா் தரப்பினா் வசிக்கும் குடியிருப்புப் பகுதிக்குள் வரும் அபாயம் இருந்ததால் அவா்கள் ஏரியின் ஒரு அடி சுவரை உடைத்து சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து ஓசூா் வட்டார வளா்ச்சி அலுவலா் பூபதி, நகர காவல் நிலையத்தில் புகாரளித்தாா். அதன் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி சிவகுமாா், சின்னசாமி, வினோத்குமாா் அவா்களுக்கு உடந்தையாக இருந்த சிவானந்தம் (31) ஆகிய 4 பேரைக் கைது செய்தனா். அவா்கள் மீது பொது சொத்துக்கு சேதம் விளைவித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.