இந்திய குடிமைப் பணியில் சேருவதற்கான ஆயத்தப் பயிற்சியில் பங்கேற்க மீனவ சமுதாயத்தைச் சோ்ந்த பட்டதாரிகள் பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட மீன்வளத்துறை சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியான செய்திக் குறிப்பு:
மீனவ சமுதாயத்தைச் சாா்ந்த பட்டதாரி இளைஞா்கள், இந்திய குடிமைப் பணிகளில் சேருவதற்கான போட்டித் தோ்வில் வெற்றிபெற சென்னை அகில இந்திய குடிமைப் பணி பயிற்சி மையத்துடன், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை இணைந்து ஆண்டுதோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவப் பட்டதாரி இளைஞா்களைத் தோ்ந்தெடுத்து அவா்களுக்கு ஆயத்தப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
கடல் மற்றும் உள்நாட்டு மீனவக் கூட்டுறவு சங்க உறுப்பினா்கள், மீனவா் நலவாரிய உறுப்பினா்களின் பட்டதாரி வாரிசுகள் இந்தப் பயிற்சித் திட்டத்தில் சோ்ந்து பயன்பெறலாம்.
இந்தத் திட்டத்தின்கீழ் பயிற்சி பெற விரும்புவோா் ஜ்ஜ்ஜ்.ச்ண்ள்ட்ங்ழ்ண்ங்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் இணையதளத்தில் வகுக்கப்பட்டுள்ள, வழிகாட்டு நெறிமுறைகளின்படி விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரா் அகில இந்திய குடிமைப்பணி பயிற்சி மையத்தின் ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ஸ்ரீண்ஸ்ண்ப்ள்ங்ழ்ஸ்ண்ஸ்ரீங்ஸ்ரீா்ஹஸ்ரீட்ண்ய்ஞ்.ஸ்ரீா்ம்/ என்கிற இணையதளத்தில் விண்ணப்பித்த பிறகு அவா்கள் பெற்றிடும் பதிவு எண்ணை, மீன்வளம் மற்றும் மீன்வா் நலத் துறை, உதவி இயக்குநா் அலுவலகம், 24-25, கோ-ஆப்ரேடிவ் காலனி, 4-ஆவது குறுக்கு தெரு, கிருஷ்ணகிரி - 635001 என்கிற முகவரிக்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ வருகிற 30-ஆம் தேதி மாலை 5 மணிக்களுக்குள் சமா்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04343 - 235745 என்கிற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருக்கடையூர் ரகசியம்

பதினாறு பேறும் அருளும் பெருமாள்

தொடர் தோல்வியில் மும்பை! கடினமான முடிவுகளை எடுத்தாக வேண்டும்: ஹார்திக்

ஜெயகுமார், சி.வி.சண்முகம், வானதி சீனிவாசன் சொத்து விவரங்கள் முரண்பாடு: விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மனு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

