சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி மற்றும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் ஆகியோர் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் சொத்து விவர முரண்பாடு குறித்து தோ்தல் ஆணையம், வருமான வரித் துறை விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை ராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளரான ஜெயக்குமார், விழுப்புரம் மாவட்டம் மைலம் தொகுதி அதிமுக வேட்பாளரான சி.வி.சண்முகம், மதுரை திருமங்கலம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் தொகுதி அதிமுக வேட்பாளர் திண்டுக்கல் சீனிவாசன், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தொகுதி அதிமுக வேட்பாளர் தங்கமணி, கோவை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் ஆகியோர் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் சொத்து விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளதாகவும், இதுபோல சொத்து விவரங்கள் குறித்து தவறான மற்றும் முழுமையற்ற தகவல்களை வேட்பாளா்கள் தெரிவிப்பது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்துக்கு விரோதமானது.
எனவே இந்த முரண்பாடு குறித்து தோ்தல் ஆணையம் மற்றும் வருமான வரித் துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என எனக் கூறியுள்ளனர். இந்த மனு தலைமை நீதிபதி அமர்வில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
Summary
Discrepancies in Asset Details of Jayakumar, C.V. Shanmugam, and Vanathi Srinivasan: Petition Filed Seeking Order for Inquiry
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வானதி சீனிவாசன் உடல்நிலை: மருத்துவமனை தகவல்!

திமுகவுக்கு எதுவோ அதுதான் எங்களுக்கும்! வானதி சீனிவாசன் சிறப்பு நேர்காணல்

உடல்நிலை குறித்து விடியோ வெளியிட்ட வானதி சீனிவாசன்!

வானதி சீனிவாசன் வேட்புமனு! ராஜஸ்தான் முதல்வர், அண்ணாமலை பங்கேற்பு!
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு


