தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

உடல்நிலை குறித்து விடியோ வெளியிட்ட வானதி சீனிவாசன்!

பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்ட விடியோ குறித்து...

News image
Updated On :13 ஏப்ரல் 2026, 10:23 am

வலது காலில் ஏற்பட்டுள்ள லேசான தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாஜக மகளிரணி தேசியத் தலைவரும் கோவை வடக்குத் தொகுதி பாஜக வேட்பாளருமான வானதி சீனிவாசன், மருத்துவமனையில் இருந்து விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

“உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கும், எனக்காக இறைவனிடம் மனமுருக வேண்டிக் கொண்டதற்கும் மனமார்ந்த நன்றி.

இந்த தருணத்தில் என்னுடன் நின்ற அனைத்து அண்ணன்களுக்கும், அக்காக்களுக்கும், தம்பி - தங்கைகளுக்கும் உங்கள் ஒவ்வொருவரின் உழைப்பும் என் மனதில் பதிந்திருக்கிறது.

உங்கள் பிரார்த்தனையே என் வலிமை.. உங்கள் நம்பிக்கையே என் மருந்து.. விரைவில் குணமடைந்து உங்களிடையே வருவேன் மீண்டும் சந்திப்போம், வெற்றியைக் கொண்டாடுவோம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று(ஏப். 13) மாலை நடைபெறும் ‘எனது வாக்குச்சாவடி, வலிமையான வாக்குச்சாவடி கலந்துரையாடல்’ நிகழ்ச்சியில் பாஜக தொண்டர்கள் கலந்துக்கொள்ள வேண்டும் என்று வானதி சீனிவாசன் விடியோவில் தெரிவித்துள்ளார்.

கோவை வடக்குத் தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வானதி சீனிவாசன், கடந்த சில நாள்களாக தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் வலது காலில் வீக்கம், வலி காரணமாக கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.

அவரது காலில் லேசான தொற்று இருப்பதாகவும், இதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் 2 நாள்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும்போது வழங்கப்பட்ட ஒரு மருந்தால் அவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். முழுமையாக குணமடைவதற்கு அவருக்கு குறைந்தது 3 முதல் 4 நாள்கள் வரை சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Summary

Vanathi Srinivasan—the National President of the BJP Women's Wing and the party's candidate for the Coimbatore North constituency—who has been hospitalized due to a minor infection in her right leg, has released a video from the hospital.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.