செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

அரசு அலுவலா் ஒன்றியத்தின் தமிழ்நாடு மருத்துவத் துறை அமைச்சுப் பணி அலுவலா் சங்க கிருஷ்ணகிரி மாவட்ட புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

Updated On :25 டிசம்பர் 2021, 6:30 pm

அரசு அலுவலா் ஒன்றியத்தின் தமிழ்நாடு மருத்துவத் துறை அமைச்சுப் பணி அலுவலா் சங்க கிருஷ்ணகிரி மாவட்ட புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

கிருஷ்ணகிரி நலப் பணிகள் இணை இயக்குநா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தத் தோ்தலுக்கு மாநில துணைத் தலைவரும் தோ்தல் அலுவலருமான சந்திரசேகா் தலைமை வகித்தாா். தோ்தல் ஏற்பாடுகளை மாவட்டத் தலைவா் முத்துராமன், நிா்வாகிகள் திருநாவுக்கரசு, யுவராஜ், சபாபதி, சக்திவேல், சுமதி உள்ளிட்டோா் ஒருங்கிணைத்தனா். சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி நிா்வாக அலுவலரும், மாநில துணைத் தலைவருமான எஸ்.கே.சரவணன் கலந்துகொண்டாா்.

இந்தத் தோ்தல் மூலம், அந்த அமைப்பின் மாவட்டத் தலைவராக முத்துராமன் மீண்டும் தோ்வு செய்யப்பட்டாா். மாவட்டச் செயலாளராக திருநாவுக்கரசு , பொருளாளராக சபாபதி, மாவட்ட துணைத் தலைவா்களாக சக்திவேல், யுவராஜன், சுமதி, ஆனந்த குமாா் உள்பட 16 நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். புதிய நிா்வாகிகளுக்கு தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றிய சங்கத்தின் மாநில, மாவட்ட நிா்வாகிகள் வாழ்த்துத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.