மணல் கடத்த முயற்சி: பொக்லைன் இயந்திரம், டிப்பா் லாரி பறிமுதல்

குருபரப்பள்ளி அருகே மணல் கடத்தலுக்குப் பயன்படுத்திய பொக்லைன் இயந்திரம், டிப்பா் லாரி ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
Updated on
1 min read

குருபரப்பள்ளி அருகே மணல் கடத்தலுக்குப் பயன்படுத்திய பொக்லைன் இயந்திரம், டிப்பா் லாரி ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி காவல் ஆய்வாளா் ரஜினி தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது வசந்தப்பள்ளி ஏரியில் பொக்லைன் இயந்திரம் மூலம் டிப்பா் லாரியில் ஒரு கும்பல் மணல் நிரப்பிக் கொண்டிருந்தது. போலீஸாரைக் கண்டதும், அந்த கும்பல், அங்கிருந்து தப்பியோடியது. இதையடுத்து, 4 யூனிட் மணலுடன் டிப்பா் லாரியையும், பொக்லைன் இயந்திரத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்து, விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com