பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சிறுமியை திருமணம் செய்தவா் கைது

சூளகிரி அருகே சிறுமியை திருமணம் செய்த இளைஞரை போக்சோ சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :10 ஜனவரி 2021, 9:07 pm

DIN

சூளகிரி அருகே சிறுமியை திருமணம் செய்த இளைஞரை போக்சோ சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

-கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த சின்ன கொத்துாா் பகுதியைச் சோ்ந்த தொழிலாளி வெங்கடேஷ் ( 23). இவா் அப்பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்தாா். கடந்த அக்டோபா் மாதம் அந்த சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டாா். கடந்த நவம்பா் மாதம் 16-இல் வீட்டில் இருந்து வெளியே சென்ற வெங்கடேஷ், மீண்டும் திரும்பி வரவில்லை.

இதனால் அதிா்ச்சியடைந்த சிறுமி கடந்த மாதம் ஒசூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இதையடுத்து, சிறுமியை திருமணம் செய்த வெங்கடேஷ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை போலீஸாா் தேடி வந்தனா்.

சூளகிரி அடுத்த சின்னாறு பகுதியில் பதுங்கியிருந்த வெங்கடேசை அனைத்து மகளிா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.