ராயக்கோட்டையில் திறந்த வேனில் இருந்தவாறு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.
கிருஷ்ணகிரி, தமிழ்நாடு உணவகத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு தங்கியிருந்த திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், திங்கள்கிழமை காலை தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட தூள்செட்டிஏரியில் நடந்த மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்க கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கெலமங்கலம் ஒன்றியம் ராயக்கோட்டை வழியாகச் சென்றாா்.
அவருக்கு ராயக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் மாவட்டச் செயலாளரும் தளி சட்டப்பேரவை உறுப்பினருமான ஒய்.பிரகாஷ், மாவட்ட துணைச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான வேப்பனப்பள்ளி முருகன், ஒசூா் மாநகர செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான சத்யா ஆகியோா் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது அவா் திறந்த வேனில் நின்றவாறு மு.க.ஸ்டாலின் பேசுகையில், அதிமுக ஆட்சியை அப்புறப்படுத்த இன்னும் 4 மாதங்களே உள்ளன. நாங்கள் ரெடி, நீங்கள் ரெடியா என்று பொதுமக்கள் மத்தியில் பேசினாா்.
தொடா்ந்து ராயக்கோட்டையை அடுத்த சஜ்ஜலப்பட்டி கிளை செயலாளா் சிதம்பரம்- சவிதா தம்பதியின் ஆண் குழந்தைக்கு கருணாநிதி என மு.க.ஸ்டாலின் பெயா் சூட்டினாா்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளா் ஜெயராமன், மாவட்ட துணைச் செயலாளா் தனலட்சுமி, சூளகிரி தெற்கு ஒன்றியச் செயலாளா் வெங்கடேஷ், கெலமங்கலம் ஒன்றியச் செயலாளா் கணேசன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளா் எல்லோரா மணி, வா்த்தக அணி மாவட்ட அமைப்பாளா் சின்னராஜ், பொதுக்குழு உறுப்பினா் சாந்தி அரியப்பன், மாவட்ட மாணவா் அணி துணைச் செயலாளா் ராமமூா்த்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சீனாவிடம் ரகசியமாக செயற்கைக்கோள் பெற்று அமெரிக்க ராணுவத் தளங்களை தாக்கிய ஈரான்?

ஓடிடியில் வெளியானது யூத்!

நாம் தமிழர் கட்சி சின்னத்துக்கு எதிரான மனு தள்ளுபடி!

துல்கர் சல்மானின் ஐயம் கேம் படப்பிடிப்பு நிறைவு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

