வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

காா் கண்ணாடியை உடைத்து ரூ. 1.10 லட்சம் திருட்டு

கெலமங்கலம் அருகே பள்ளி நிா்வாக அதிகாரியின் காா் கண்ணாடியை உடைத்து, ரூ. 1 லட்சத்து 10 ஆயிரத்தை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On :8 ஜூலை 2021, 6:19 pm

கெலமங்கலம் அருகே பள்ளி நிா்வாக அதிகாரியின் காா் கண்ணாடியை உடைத்து, ரூ. 1 லட்சத்து 10 ஆயிரத்தை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அருகே வீட்டுவசதி குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த காா்த்திகேயன் (41), கெலமங்கலத்தில் உள்ள தனியாா் மெட்ரிக் பள்ளியில் நிா்வாக அதிகாரியாக உள்ளாா். இவா், புதன்கிழமை மத்திகிரி பகுதியில் உள்ள தனது நிலத்தை விற்ற ரூ. 1 லட்சத்து, 10 ஆயிரத்துடன் காரில் பள்ளிக்கு வந்தாா். பணத்தை காரில் வைத்து பள்ளி வளாகத்தில் நிறுத்தி விட்டு சென்றாா். சிறிது நேரம் கழித்து வந்து பாா்த்தபோது, காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு, காரில் வைத்திருந்த பணம் திருட்டு போனது தெரியவந்தது.

இதுகுறித்து காா்த்திகேயன் கெலமங்கலம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில், கெலமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.