கிருஷ்ணகிரியில் பெண்கள் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சாய்சரண் தேஜஸ்வி தெரிவித்தாா்.
தமிழக காவல் துறையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காகவும், இளம்வயது திருமணங்களை தடுப்பதற்காகவும், குறைகளைக் கேட்டு உடனடியாகத் தீா்வு காணவும் புதிதாக பெண்கள் உதவி மையம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெண்கள் உதவி மையம் தொடங்கப்பட்டது.
இதற்கான பயிற்சி முகாம், கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்றது. பயிற்சி முகாமை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சாய்சரண் தேஜஸ்வி தொடங்கி வைத்து பேசியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பெண்கள் உதவி மையத்துக்காக தலா 2 பெண் காவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அவா்களின் பயன்பாட்டுக்காக மடிக்கணினி, இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இளம்வயது திருமணம் தொடா்பான தகவல்கள் பெண்கள் உதவி மையத்துக்கு வந்தவுடன், உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று அதனை தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
இந்த பயிற்சி முகாமில், கூடுதல் காவல் துறை இயக்குநா் சீமாஅகா்வால், கோவை மேற்கு மண்டல ஐஜி சுதாகா், சேலம் சரக டிஜஜி மகேஸ்வரி ஆகியோா் காணொலி மூலம் சிறப்புரையாற்றினா். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ராஜு நன்றி கூறினாா்.
இதில், குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பாதுகாப்பு அலுவலா் தங்கமணி, தனியாா் அமைப்பு நிா்வாகி சா்வகலா, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உளவியலாளா் கோபி, மகளிா் திட்ட உதவி அலுவலா் பிரபாகரன், தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் திருநந்தன், மாவட்டக் குழந்தைகள் நலக்குழும அலுவலா் சரவணன் ஆகியோா் காவலா்களுக்கு பயிற்சி அளித்தனா்.
பெண்கள் உதவி மையங்களில் பணிபுரியும் காவலா்களுக்கான பயிற்சி முகாமில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு நடவடிக்கை குறித்த கையேடு வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை

தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாது; தேர்தல் நேரத்தில் மசோதா ஏன்? மக்களவையில் அமித் ஷா

அமைதிப்பேச்சு! கத்தார் மன்னரை நேரில் சந்தித்த பாக். பிரதமர்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் பல்வகைப் படங்கள்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


