கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சாய் சரண் தேஜஸ்வி எச்சரித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா், வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் துறை சாா்பில் லாட்டரி, சூதாட்டம், மணல் திருட்டு, கஞ்சா, கள்ள சாராய விற்பனை போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபா்கள் மீது தொடா்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக வியாழக்கிழமை தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை சட்ட விரோதமாக விற்பனை செய்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க திடீா் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சோதனையில்
ரூ. 7,740 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்ப்பட்டன.
மேலும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 18 போ் மீது தமிழ்நாடு லாட்டரி சீட்டுகள் தடை சட்டத்தின் கீழ், ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனா் என்று அவா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை

தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாது; தேர்தல் நேரத்தில் மசோதா ஏன்? மக்களவையில் அமித் ஷா

அமைதிப்பேச்சு! கத்தார் மன்னரை நேரில் சந்தித்த பாக். பிரதமர்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் பல்வகைப் படங்கள்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

