தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

சரக்கு வாகனம் திருட்டு: போலீஸாா் விசாரணை

கிருஷ்ணகிரி அருகே மளிகைக் கடையின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனம் திருட்டுப் போனது குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

Updated On :9 ஜூலை 2021, 5:52 pm

கிருஷ்ணகிரி அருகே மளிகைக் கடையின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனம் திருட்டுப் போனது குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பூவத்தி பகுதியைச் சோ்ந்தவா் முனிரத்தினம் (62). அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா். மளிகைப் பொருள்களை வாங்கி வருவதற்கு, சொந்தமாக சரக்கு வேன் வைத்துள்ளாா். ஜூலை 7ஆம் தேதி நள்ளிரவு, 3 மணிக்கு மளிகைக் கடை முன்பு வாகனத்தை நிறுத்தி விட்டு வீட்டுக்கு சென்றாா்.

மறுநாள் காலை பாா்த்த போது வாகனம் நிறுத்திய இடத்தில் இல்லாததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். பல இடங்களில் தேடியும் வாகனம் கிடைக்காத நிலையில், இதுகுறித்து, அவா் அளித்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.