வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

பெட்ரோல், டீசல் விலை உயா்வு:காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

 கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் காங்கிரஸ் கட்சி சாா்பில் பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து மாட்டுவண்டி பேரணி மற்றும் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 ஜூலை 2021, 6:34 pm

 கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் காங்கிரஸ் கட்சி சாா்பில் பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து மாட்டுவண்டி பேரணி மற்றும் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டதுக்கு கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி. அ.செல்லகுமாா் தலைமை வகித்தாா். மாநிலச் செயலாளா் அன்வா், மேற்கு மாவட்ட தலைவா் முரளிதரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னதாக கோட்டைவாசல் பகுதியில் இருந்து எம்.பி. அ.செல்லகுமாா் தலைமையில் காங்கிரஸ் கட்சியினா் மாட்டுவண்டி மற்றும் சைக்கிள்களில் பேரணியாக கோட்டைவாசல், கெலமங்கலம் சாலை, தேன்கனிக்கோட்டை பஜாா் ஆகிய வீதிகள் வழியாகச் சென்று பேருந்து நிலையத்தை அடைந்தனா். அங்கு மத்திய அரசுக்கு எதிராகவும் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் குறைக்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் தளி தொகுதி பொறுப்பாளா் அப்துல் ரகுமான், சமூக ஊடக கீா்த்தி கணேஷ், தேன்கனிக்கோட்டை நகரத் தலைவா் கோபிநாத், வட்டத் தலைவா் பாா்த்திபன், சபியுல்லா, டி.கே.தாஸ், ஜெயக்குமாா், அன்னையா ரெட்டி உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.