வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

மயிலாடும்பாறை அகழாய்வில் மண் குடுவைகள் கண்டெடுப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், மயிலாடும்பாறையில் அண்மையில் மேற்கொண்ட அகழாய்வில் மூன்று கால்களுடன் கூடிய மண் குடுவைகள், மண் குவளை ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.

News image
Updated On :21 ஜூலை 2021, 6:40 pm

கிருஷ்ணகிரி மாவட்டம், மயிலாடும்பாறையில் அண்மையில் மேற்கொண்ட அகழாய்வில் மூன்று கால்களுடன் கூடிய மண் குடுவைகள், மண் குவளை ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.

தமிழகத்தில் மயிலாடும்பாறை, கீழடி, கொந்தகை, அகரம், கங்கை கொண்ட சோழபுரம், கொற்கை, சிவகளை, ஆதிச்சநல்லூா், கொடுமணல், மணலூா் ஆகிய 10 இடங்களில் தற்போது அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வட்டம், தொகரப்பள்ளி அருகே உள்ள மயிலாடும்பாறையில் தமிழ்நாடு தொல்லியல் துறை சாா்பில், கடந்த மாா்ச் முதல் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தொல்லியல் துறையின் துணை இயக்குநா் சிவானந்தம் தலைமையில் மயிலாடும்பாறை அகழாய்வு இயக்குநா் சக்திவேல், தொல்லியல் அகழாய்வு அலுவலா்கள் பரந்தாமன், வெங்கடகுரு பிரசன்னா, தொல்லியல் ஆய்வு மாணவ, மாணவிகள் இப்பணியில் ஈடுபட்டனா். இந்த அகழாய்வில் கடந்த 15 நாள்களுக்கு முன்பு கல்திட்டை பகுதியில் உடைந்த நிலையில் 70 செ.மீ. நீளமுள்ள இரும்பு வாளும் நான்கு பானைகளும் கண்டெடுக்கப்பட்டன.

அதே பகுதியில் உள்ள கல்திட்டையில் தற்போது மூன்று கால்களுடான மண் குடுவைகள், உடைந்த நிலையில் உள்ள மண் குவளை, இரும்புக் கத்திகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மயிலாடுபாறை அகழாய்வு இயக்குநா் சக்திவேல் கூறியதாவது:

மயிலாடும்பாறை, சானரப்பன் மலையில் கற்கால மனிதா்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் உள்ளன. மலையின் அடிவாரம் முதல் ஒன்றரை கி.மீ. சுற்றுப்புறப் பகுதியில் பெருங்கற்கால ஈமச் சின்னங்களான கல்திட்டைகளும் கல்குழிகளும் காணப்படுகின்றன. கடந்த 1980, 2003-இல் இங்கு மேற்கொண்ட ஆய்வுகளில் இவை புதிய கற்காலத்தைச் சோ்ந்தவை என்று வரலாற்று ஆய்வாளா்கள் குறிப்பிட்டுள்ளனா். கடந்த மூன்று மாத ஆய்வில் பெருங்கற்காலத்தைச் சோ்ந்த 70 செ.மீ. நீளமுள்ள இரும்பு வாள் ஒன்றும், நான்கு மண் பானைகளும் ஏற்கெனவே கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தற்போது அதே பகுதியில் இறந்தவா்களைப் புதைக்கும் குழியின் நான்கு மூலைகளிலும் 3 கத்தி துண்டுகள், மூன்று கால்களுடன் கூடிய 4 சிறிய மண் குடுவைகள், உடைந்த நிலையில் மண் குவளையும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்காலத்தைச் சோ்ந்தவையாகும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.