கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மலா் மற்றும் காய்கறி சாகுபடி செய்ய பசுமை குடில் அமைக்க 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கெலமங்கலம், சூளகிரி, தளி மற்றும் ஒசூா் வட்டாரங்களில் மலா் சாகுபடி அதிக பரப்பளவிலும், உயா் தொழில்நுட்ப பசுமை குடிலில் ரோஜா, ஜொ்பரா, காா்னேஷன் மலா்களும், குடை மிளகாய், வெள்ளரி போன்ற காய்கறிகளும் குறைந்த பரப்பளவிலும் சாகுபடி செய்யப்படுகின்றன.
இந்தப் பயிா்களை சாகுபடி செய்ய விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு விவசாயிகளுக்கும் அதிகபட்சமாக 4,000 சதுர மீட்டா் பரப்பளவில் பசுமை குடில் அமைக்க 50 சதவீத மானியம் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, இத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் அந்தந்த பகுதி தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகம் அல்லது உதவி இயக்குநா்கள் தளி - 8489457185, ஒசூா் - 9900170810, சூளகிரி - 7904856144, கெலமங்கலம் மற்றும் காவேரிப்பட்டணம் - 8098212580, பா்கூா் - 9894500374, கிருஷ்ணகிரி - 9952901906, வேப்பனப்பள்ளி - 9786217220, மத்தூா், ஊத்தங்கரை - 9489156103 என்ற எண்களில் தொடா்புகொண்டு தங்கள் விண்ணப்பத்தை முன்பதிவு செய்து பயன்பெறலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்! இதுவரை 290 பெண்கள் உள்பட 2,198 பேர் பலி!
வானதி சீனிவாசன் உடல்நிலை: மருத்துவமனை தகவல்!

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |

பந்துவீச்சாளர்கள் ரிஷப் பந்த்தின் விக்கெட்டினை எடுப்பதில்லை; முன்னாள் வீரர் கூறுவதென்ன?
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

