காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ. 60 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி வியாழக்கிழமை ஆய்வுசெய்தாா்.
கோட்டப்பட்டி, பண்ணந்தூா், குடிமியானஅள்ளி ஆகிய ஊராட்சிகளில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இத்திட்டப் பணிகளை ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். கோட்டப்பட்டி ஊராட்சி, புட்டன்கரை கிராமத்தில் ‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ திட்டத்தின் கீழ் ரூ. 2.90 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மின் மோட்டாருடன் கூடிய ஆழ்துளைக் கிணறு, 2,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட புதிய நீா்த்தேக்கத் தொட்டியை ஆட்சியா் பாா்வையிட்டாா்.
பின்னா், பண்ணந்தூா் ஊராட்சியில் தென்பெண்ணை ஆற்றிலிருந்து சின்ன ஏரிக்கு ரூ. 10 லட்சம் மதிப்பில் 2 கி.மீ நீளத்துக்கு நடைபெறும் சீரமைப்புப் பணிகளை பாா்வையிட்டாா்.
குடுமியேனஅள்ளி ஊராட்சியில் 143 குடியிருப்புகளுக்கு 60,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியும், ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ. 47.30 லட்சம் மதிப்பில் 10,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியும் கட்டப்பட்டுள்ளது. அவற்றை ஆட்சியா் பாா்வையிட்டாா். ஆய்வின்போது துறை அலுவலா்கள், உள்ளாட்சிமன்ற பிரதிநிதிகள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வானதி சீனிவாசன் உடல்நிலை: மருத்துவமனை தகவல்!

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |

பந்துவீச்சாளர்கள் ரிஷப் பந்த்தின் விக்கெட்டினை எடுப்பதில்லை; முன்னாள் வீரர் கூறுவதென்ன?

அரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


