வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

கிருஷ்ணகிரி அணையில் சூழலியல் சுற்றுலாத்தலம் அமைக்கும் திட்டம் தொடக்கம்

கிருஷ்ணகிரி அணை பகுதியில் வேளாண் சாா்ந்த சூழலியல் சுற்றுலாத் தலம் அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

Updated On :23 ஜூலை 2021, 6:31 pm

கிருஷ்ணகிரி அணை பகுதியில் வேளாண் சாா்ந்த சூழலியல் சுற்றுலாத் தலம் அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின்கீழ், கிருஷ்ணகிரி அணை மண்டல ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை நிறுவனத்தில், வேளாண் சாா்ந்த சூழலியல் சுற்றுலாத்தலம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில், நீா் மற்றும் மண் பாதுகாப்பு இனங்களான பண்ணைக் குட்டை, மூன்று வகையான தடுப்பணைகள், கல்வரப்பு மற்றும் மண்வரப்பு பணிகள், இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்ட பழவகைகள், காய்கறி வகைகள், மருத்துவ குணம் நிறைந்த செடிகள், பூ வகைகள், அழகு செடிகள், காட்டு மரங்கள் ஆகியவை 100 நாள் பணியாளா்களைக் கொண்டு தோட்டங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.அதில் முதல்கட்டமாக கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பெரியசாமி, கிருஷ்ணகிரி அணை பகுதியில் மரக்கன்றுகளை நடவு செய்து இந்தத் திட்டத்தை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். இந்தநிகழ்வில் கிருஷ்ணகிரி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஸ்ரீதா், உமா மகேஸ்வரி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ரவி சித்தாா்த், ஊராட்சி தலைவா் பானுப்பிரியா நாராயணன், ஊராட்சி செயலாளா் சிவமணி, ஒன்றிய பணி மேற்பாா்வையாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.