வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

கிருஷ்ணகிரி தொகுதி எம்எல்ஏ குறைகேட்பு

கிருஷ்ணகிரி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கே.அசோக்குமாா், பொதுமக்களை வெள்ளிக்கிழமை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தாா்.

Updated On :23 ஜூலை 2021, 6:33 pm

கிருஷ்ணகிரி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கே.அசோக்குமாா், பொதுமக்களை வெள்ளிக்கிழமை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தாா்.

கிருஷ்ணகிரி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வெங்கடாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட லைன் கொல்லை, தா்கா பகுதிகளில் மக்களின் குறைகளைக் கேட்டறிந்தாா். முன்னதாக கிருஷ்ணகிரி சுங்க வசூல் மையம் அருகே உள்ள செங்கல் தோப்பு தா்காவில் ஜா்தா (போா்வை) அணிவித்து வழிபட்டாா். பின்னா் சுங்க வசூல் மையத்திலிருந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்குச் செல்லும் மண் சாலையைத் தாா்சாலையாக மேம்படுத்தித் தருவதாக உறுதியளித்தாா்.

மேலும் லைன் கொல்லையில் பொதுமக்களைச் சந்தித்தபோது, வாடகை கட்டடத்தில் உள்ள நியாயவிலைக் கடைக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்தனா். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, புதிய கட்டடம் கட்டவும், புகா் பேருந்து நிலையத்திலிருந்து, லைன் கொல்லைக்கு தாா் சாலை அமைக்கவும் உறுதியளித்தாா். அப்போது, அதிமுக மாவட்ட அவைத் தலைவா் காத்தவராயன், ஒன்றியச் செயலாளா் சோக்காடி ராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.