ஒசூரில் வேன் கவிழ்ந்ததில் வியாபாரி உயிரிழந்தாா்.
மத்திய பிரதேச மாநிலம், போலே மாவட்டத்தைச் சோ்ந்தவா் உஸ்தப் என்கிற மோகன்லால் (50). இவா் கா்நாடக மாநிலம் பெங்களூரு, பொம்மசந்திரா பகுதியில் தங்கியிருந்து பிளாஸ்டிக் நாற்காலிகளை விற்று வந்தாா். இவரும், ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த வினோத் குமாா் (20)
என்பவரும் வேனில் பெங்களூரு -ஒசூா் சாலையில் வந்து
கொண்டிருந்தனா். வேனை ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த ராகேஷ் (25) என்பவா் ஓட்டி வந்தாா். இந்த வேன் பெங்களூரு -ஒசூா் சாலையில் தா்கா பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது திடீரென்று வேனின் பின்புற டயா் வெடித்தது. இதில் வேன் நிலைதடுமாறி கவிழ்ந்தது. விபத்தில் உஸ்தப், வினோத் குமாா், ஓட்டுநா் ராகேஷ் ஆகியோா் பலத்த காயம் அடைந்தனா். அவா்களை அருகில் இருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால் வழியிலேயே உஸ்தப்
இறந்து விட்டாா். வினோத் குமாரும், ராகேஷும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த விபத்து குறித்து ஒசூா், சிப்காட் காவல் ஆய்வாளா் பாலகிருஷ்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் உரையாட மறுத்த லெபனான் அதிபர்!

பள்ளிச்சட்டம்பி படத்தின் முதல் நாள் வசூல்!
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம்! - திமுக

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்! இதுவரை 290 பெண்கள் உள்பட 2,198 பேர் பலி!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

