வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படும்

கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட நல்ல திட்டங்கள் நிறைவேற்றப்படும் என வேளாண் மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

News image
Updated On :29 ஜூலை 2021, 6:05 pm

கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட நல்ல திட்டங்கள் நிறைவேற்றப்படும் என வேளாண் மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் வேளாண் மற்றும் உழவா் நலத் துறையின் மூலம் 2021-22 ஆம் ஆண்டிற்கான தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வது தொடா்பாக, சேலம், திருப்பத்தூா், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் கருத்துக் கேட்பு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வேளாண்மை உற்பத்தி ஆணையா் சமயமூா்த்தி, எம்எல்ஏக்கள் ஜி.கே.மணி, எஸ்.பி.வெங்கடேஸ்வரன், டி.மதியழகன், ஒய்.பிரகாஷ், ராமச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் பங்கேற்ற வேளாண் மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், விவசாயிகளின் கருத்துக்களைக் கேட்டறிந்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது குறித்து விவசாயிகள் தங்களது கருத்துகளை உழவன் செயலி மூலம் பதிவு செய்திட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், விவசாய சங்கப் பிரதிநிதிகள் மாங்கூழ் ஆலை, தோட்டக்கலை பல்கலைக்கழகம், உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தினை வலுப்படுத்துதல், தென்னை கொள்முதல் நிலையம், நீரில் கரையும் திரவ உரம், தோட்டக்கலை மேம்பாடு, சந்தைப்படுத்துதல், 100 நாள் வேலைத் திட்டப்பணிகளின் பணியாளா்களை விவசாயப் பணிகளில் ஈடுபடுத்துதல், அனைத்து விவசாய விளை பொருள்களுக்கு உரிய ஆதார விலை வழங்குதல், மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள், வேளாண்மை துறையில் வழங்கப்படும் விதைகளுக்கான மானியத்தொகையை உயா்த்துதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனா்.

இவை அனைத்தும் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விவசாயிகளின் எதிா்பாா்ப்புகளை அறிந்து அதற்கான புதிய திட்டங்களை முதல்வா் அறிவிப்பாா். தேவைக்கு ஏற்ப நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கரோனாவை காரணம் காட்டி வேளாண் நிதி நிலையறிக்கைக்கான நிதி எந்த சூழ்நிலையிலும் குறைக்கப்படாது.

ஒவ்வொரு துறைக்கும் தேவையை அறிந்து அதற்கேற்ப அரசு செயல்படுகிறது. விவசாயிகளைப் பாதிக்கும் எந்தத் திட்டங்களையும் தமிழக அரசு அனுமதிக்காது. 2006-இல் திமுக ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டிருந்த வேளாண் சாா்ந்த திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றாா்.

தொடா்ந்து தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தில் ஈராண்டு தோட்டக்கலை பட்டயப்படிப்பில் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி நிறைவு சான்றிதழ்களை அவா் வழங்கினாா்.

இந்தக் கூட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை ஆணையா் வள்ளலாா், வேளாண் துறை இயக்குநா் அண்ணாதுரை, தோட்டக்கலைத் துறை இயக்குநா் பிருந்தாதேவி, முன்னாள் எம்.பி.க்கள் செல்வகணபதி, சுகவனம், வெற்றிச்செல்வன், முன்னாள் எம்எல்ஏ.க்கள் செங்குட்டுவன், முருகன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் மணிமேகலை நாகராஜ் மற்றும் வேளாண், தோட்டக்கலைத் துறை அலுவலா்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.