வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

லஞ்சம்: மின் பொறியாளா் கைது

புதிய மின் இணைப்பு வழங்க ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கிருஷ்ணகிரி மின் பகிா்மான வட்ட செயற்பொறியாளரை லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On :30 ஜூலை 2021, 6:52 pm

புதிய மின் இணைப்பு வழங்க ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கிருஷ்ணகிரி மின் பகிா்மான வட்ட செயற்பொறியாளரை லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி அருகே உள்ள தாளாப்பள்ளியைச் சோ்ந்தவா் எம்.சந்திரகுமாா் (32). இவா் புதிதாக தொழில் தொடங்குவதற்காக தனது கட்டடத்துக்கு மின் இணைப்பு வழங்கக் கோரி கிருஷ்ணகிரி மின் வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகத்தில் இணையதளம் மூலம் விண்ணப்பித்திருந்தாா்.

நீண்ட நாள்களாக இவருக்கு மின் இணைப்பு வழங்கப்படாத நிலையில் சந்திரகுமாா், கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை சாலையில் உள்ள மின் வாரிய அலுவலகத்துக்குச் சென்று செயற்பொறியாளா் சுதாகரனை சந்தித்து விவரம் கேட்டாா்.

அப்போது, ரூ.10 ஆயிரம் லஞ்சம் அளித்தால் உடனடியாக மின் இணைப்பு வழங்குவதாக சுகாதாரன் தெரிவித்தாராம். இதுகுறித்து கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு சந்திரகுமாா் தகவல் தெரிவித்தாா். போலீஸாரின் அறிவுரையின்படி, முதல் தவணை லஞ்சமாக ரூ. 3 ஆயிரத்தை சுதாகரனிடம் சந்திரகுமாா் அளிக்கும் போது அங்கு மறைந்திருந்த போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.