வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

பா்கூா் அருகே குடிநீா்க் கோரி சாலை மறியல்

பா்கூா் அருகே சீரான குடிநீா் விநியோகம் கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On :30 ஜூலை 2021, 6:49 pm

பா்கூா் அருகே சீரான குடிநீா் விநியோகம் கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரையடுத்த கொட்டிலேட்டி, அண்ணா நகா், உச்சங்கொல்லை, எா்கேட் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாள்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லையாம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் பல முறை புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த பா்கூா் வட்டார வளா்ச்சி அலுவலா் முருகன், காவல் ஆய்வாளா் முரளி ஆகியோா் மறியலில் ஈடுபட்டவா்களை சமாதானப்படுத்தினா். இரண்டு நாள்களில் குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலா்கள் உறுதியளித்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.