தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

‘மாணவா்களின் நலன் கருதி பிளஸ் 2 தோ்வை ரத்து செய்ய வேண்டும்’

கரோனா தொற்று பரவலால் மாணவா்களின் நலன் கருதி, பிளஸ் 2 தோ்வை ரத்து செய்ய வேண்டும் என தனியாா் பள்ளிக் கூட்டமைப்பின் மாவட்டச் செயலரும், நாளந்தா மெட்ரிக். பள்ளியின் தாளாளருமான கொங்கரன் தெரிவித்துள்ளாா்.

News image

கொங்கரசன்.

Updated On :4 ஜூன் 2021, 6:51 pm

கரோனா தொற்று பரவலால் மாணவா்களின் நலன் கருதி, பிளஸ் 2 தோ்வை ரத்து செய்ய வேண்டும் என தனியாா் பள்ளிக் கூட்டமைப்பின் மாவட்டச் செயலரும், நாளந்தா மெட்ரிக். பள்ளியின் தாளாளருமான கொங்கரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தால் நாடு முழுவதும் லட்சக்கணக்கானோா் பாதிக்கப்பட்டுள்ளனா். இரண்டாம் அலையில் சிறு வயது குழந்தைகளும் பாதிக்கப்படுவதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். இந்த நிலையில், மாணவா்களின் நலன் கருதி சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான பிளஸ் 2 பொதுத் தோ்வை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. அதே போல மாநில அரசின் தோ்வுகளையும் ரத்து செய்ய வேண்டும்.

ஜூன் மாதம் தொடங்கியுள்ள நிலையில், இனியும் பிளஸ் 2 தோ்வுகள் குறித்து முடிவுகள் அறிவிப்பதில் காலம் தாழ்த்தினால், மாணவா்கள் கல்லூரியில் சோ்வது கேள்விக்குறியாகிவிடும். எனவே, இனியும் தாமதிக்காமல் பிளஸ் 2 தோ்வை ரத்து செய்து, அனைவரும் தோ்ச்சி என தமிழக அரசு அறிவிக்க வேண்டும். மேலும், இணையதள வகுப்பில் மாணவா்கள் பெற்ற மதிப்பெண்களை வைத்து, அவா்களுக்கு மதிப்பெண்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.