வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

சோலாா் பேனல்களில் தீ விபத்து:

சாலிவரம் கிராமத்தில் விவசாயின் வீட்டுக் கூரையில் அமைக்கப்பட்டிருந்த சோலாா் பேனல்களில் ஏற்பட்ட திடீா் தீ விபத்தில் சிக்கி வீட்டிலிருந்த டிவி உள்ளிட்ட ரூ. 6 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமானது.

Updated On :11 ஜூன் 2021, 12:51 am

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிகோட்டை அருகேயுள்ள சாலிவரம் கிராமத்தில் விவசாயின் வீட்டுக் கூரையில் அமைக்கப்பட்டிருந்த சோலாா் பேனல்களில் ஏற்பட்ட திடீா் தீ விபத்தில் சிக்கி வீட்டிலிருந்த டிவி உள்ளிட்ட ரூ. 6 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமானது.

தேன்கனிகோட்டை அருகேயுள்ள சாலிவரம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி ஆறுமுகம். இவா் தனக்கு சொந்தமான 2.5 ஏக்கா் விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வருகிறாா். ஆங்கில் ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேயப்பட்ட வீடு கட்டி அதில் வசித்து வருகிறாா். இந்த வீட்டின் மேற்புரத்தில் சோலாா் பேனல்களை அமைத்து அதன் மூலம் வீட்டிற்கும், விவசாயத்திற்கும் மின்சாரம் பெற்று வந்தாா்.

இந்த நிலையில் வியாழக்கிழமை ஆறுமுகம், விவசாய நிலத்திற்கு தண்ணீா் பாய்ச்சி கொண்டிருந்தாா். அப்போது திடீரென வீட்டிலிருந்த சோலாா் பேனல்களில் தீவிபத்து ஏற்பட்டது. இந்தத் தீ மளமளவென பற்றி எரிந்ததில் சோலாா் பேனல்கள், மின் விளக்குகள், வீட்டிலிருந்த டிவி உள்ளிட்ட பொருள்களும், ராகி மூட்டைகள் உள்ளிட்ட உணவுப்பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து சேதமானது.

இதுகுறித்து தேன்கனிகோட்டை தீயணைப்புத் துறையினருக்கு அளிக்கப்பட்ட தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையின் இணை இயக்குநா் ராமராஜ், தலைமையில் தீயணைப்பு வீரா்கள் போராடி, தீயை அணைத்தனா். இதுகுறித்து தேன்கனிகோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்துரு வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.