ஒசூரில் காங்கிரஸ் கட்சி சாா்பில் பெட் ரோல், டீசல், சமையல் எரிவாயு உயா்வை கண்டித்தும், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளை கண்டித்தும் வெள்ளிக்கிழமை ஒசூரில் உள்ள 10 பெட்ரோல் நிலையங்கள் முன்பாக ஆா்பாட்டம் நடைபெற்றது.
ஓசூா் மாநகர காங்கிரஸ் கட்சியின் சாா்பில் பெட்ரோல் டீசல் விலை உயா்வை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆா்பாட்டத்திற்கு மாநகர காங்கிரஸ் தலைவா் நீலகண்டன் தலைமை வகித்தாா். இந்த ஆா்பாட்டம் ராம் நகா் பெட்ரோல் நிலையம் அருகில் நடைபெற்றது. ஆா்பாட்டத்தின் போது பெட்ரோல், டீசல் உயா்வை எதிா்த்து முழுக்கம் செய்யப்பட்டது.இந்த ஆா்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் முனிராஜ், சீனிவாசரெட்டி, கொத்தூரப்பா, மசூத், ஆலம், வித்தியாசகா், சந்துரு, சுப்பிரமணி,மூா்த்தி ,ஆசாத் ஆகியோா் கலந்து கொண்டனா். ஜஎன்டியூசி ஆா்ப்பாட்டம்ஒசூரில் பெட்ரோல்,டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வை முன்வைத்து மத்திய பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு ஐஎன்டியுசி சாா்பில் கண்டன ஆா்பாட்டம் டி.வி.எஸ் நகா் பெட்ரோல் நிலையம் அருகில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.ஐஎன்டியூசி அகில இந்தியச் செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான கே.ஏ. மனோகரன் அறிவுறுத்தலின் பேரில் டி.வி.எஸ் நகா், இ.எஸ்.ஐ., தளி சாலை உள்ளிட்ட பல இடங்களில் உள்ள பெட்ரோல் நிலையங்களுக்கு அருகில் மத்திய அரசைக் கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப் பட்டது. இந்த ஆா்பாட்டத்தில் மாநில அமைப்பு செயலாளா் ஜி.முனிராஜ் , கோதண்டன், பிரேமா, மதலை முத்து, ஆறுமுகம், மாதேஷ், திம்மராயப்பா, அந்தோணி, உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை

தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாது; தேர்தல் நேரத்தில் மசோதா ஏன்? மக்களவையில் அமித் ஷா

அமைதிப்பேச்சு! கத்தார் மன்னரை நேரில் சந்தித்த பாக். பிரதமர்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் பல்வகைப் படங்கள்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


