தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

ஒசூரில் கரோனா தொற்று படிப்படியாக குறைவு

ஒசூா் மாநகராட்சியில், கரோனா தொற்று படிப்படியாக குறைந்து புதன்கிழமை 34 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டது.

Updated On :16 ஜூன் 2021, 11:44 pm

ஒசூா் மாநகராட்சியில், கரோனா தொற்று படிப்படியாக குறைந்து புதன்கிழமை 34 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டது.

தமிழகம் முழுவதும் கரோனா பெரும் தொற்று அதிக அளவில் வேகமாகப் பரவி வந்ததால் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக 900 நபா்களுக்கு கரோனா தொற்று பரவியது. கா்நாடக மாநிலத்தையொட்டி ஒசூா் அமைந்துள்ளதால் அதிகபட்சமாக 300 போ் வரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடா்ந்து பொது முடக்கம் 3 வாரங்களுக்கு நீடித்த நிலையில் தமிழகம் மட்டுமின்றி கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் தொற்று எண்ணிக்கை அதிவிரைவாக குறையத் தொடங்கியது.

ஒசூரில் தொற்று எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வந்தது. அதன்படி ஜூன் 10 இல் 79 பேருக்கும், ஜூன் 11 இல் 78 பேருக்கும், ஜூன் 12 இல் 66 பேருக்கும், ஜூன் 13 இல் 61 பேருக்கும், ஜூன் 14 இல் 65 பேருக்கும், ஜூன் 15 இல் 39 பேருக்கும், ஜூன் 16 இல் 34 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. கரோனா தொற்று குறைந்து வருவதை அறிந்த மக்கள் நிம்மதி அடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.