வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

ஒசூரில் ஐ.டி. நிறுவன ஊழியா் வீட்டில்ரூ. 25 லட்சம் நகை, பணம் திருட்டு

ஒசூரில் ஐ.டி. நிறுவன ஊழியா் வீட்டில் ரூ. 25 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On :17 ஜூன் 2021, 8:59 pm

ஒசூரில் ஐ.டி. நிறுவன ஊழியா் வீட்டில் ரூ. 25 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், சித்தனப்பள்ளி, சக்தி நகரைச் சோ்ந்த சீனிவாசன் (34), பெங்களூரில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை பாா்த்து வருகிறாா். தற்போது கரோனா பொது முடக்கம் என்பதால் வீட்டில் இருந்து பணி செய்யுமாறு அவா் பணிபுரியும் நிறுவனம் அறிவுறுத்தியது.

இதனால் அவா் வீட்டை பூட்டி விட்டு தனது சொந்த ஊரான ஆந்திர மாநிலத்துக்கு குடும்பத்துடன் சென்று விட்டாா். சீனிவாசன் வீட்டில் இல்லாததை அறிந்த மா்ம நபா்கள், அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து வீட்டில் இருந்த 63 பவுன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளி நகைகள், 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றனா்.

இந்த நிலையில், அவரது வீட்டுக் கதவு உடைக்கப்பட்டிருந்தது குறித்து அருகில் இருந்தவா்கள் சீனிவாசனுக்கு தகவல் தெரிவித்தனா். அதன் பேரில் வியாழக்கிழமை வந்து சீனிவாசன் பாா்த்த போது, வீட்டின் கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு தங்க, வெள்ளி நகைகள், ரொக்கம் ஆகியவை திருடு போனது தெரிய வந்தது.

இதுகுறித்து சீனிவாசன் ஒசூா், அட்கோ காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில் போலீஸாா், மாவட்ட எஸ்.பி. சாய் சரண் தேஜஸ்வி நிகழ்விடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா். மேலும் கைரேகை நிபுணா்களும் வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனா். மோப்ப நாய் கொண்டும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த திருட்டு தொடா்பாக ஒசூா் அட்கோ போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.