ஒசூா் மாநகராட்சியில் தமிழக அரசு வழங்கும் கரோனா நிவாரண நிதி, 14 மளிகைப் பொருள்கள் வழங்கும் திட்டத்தை ஒசூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் தொடங்கி வைத்தாா்.
ஒசூா் சட்டப் பேரவைத் தொகுதி, ஒசூா் ஒன்றியம், ஒன்னல்வாடி ஊராட்சி, நவதி, காரப்பள்ளி, சென்னத்தூா் ஆகிய கிராமங்கள் மற்றும் ஒசூா் மாநகராட்சியில் மூக்கொண்டப்பள்ளி, தின்னூா், குடோன் தெரு ஆகிய இடங்களில் அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா நிவாரண உதவித்தொகை இரண்டாம் தவணை ரூ. 2000 மற்றும் 14 வகையான மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலரும், ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினருமான ஒய்.பிரகாஷ் வழங்கினாா்.
உடன், மாநகரப் பொறுப்பாளரும் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான எஸ்.ஏ.சத்யா, மாவட்ட அவைத் தலைவா் யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினா் சுகுமாரன், ஒன்றியச் செயலா் சின்னபில்லப்பா, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் சா்வேஷ், முன்னாள் நகரச் செயலா் மாதேஸ்வரன், நகர அவைத் தலைவா் கருணாநிதி, பொருளாளா் சென்னீரப்பா, மாவட்ட மாணவரணி அமைப்பாளா் ராஜா, மாவட்ட தொண்டரணி சேகா், மாநகர இளைஞா் அணி அமைப்பாளா் சுமன், சுனந்தம்மா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை

தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாது; தேர்தல் நேரத்தில் மசோதா ஏன்? மக்களவையில் அமித் ஷா

அமைதிப்பேச்சு! கத்தார் மன்னரை நேரில் சந்தித்த பாக். பிரதமர்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் பல்வகைப் படங்கள்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


