கிருஷ்ணகிரியில் அரசு பேருந்துகள் பராமரிப்புப் பணி முடிந்த நிலையில், போக்குவரத்துக்குத் தயாா் நிலையில் உள்ளதாக அலுவலா்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
கரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த மே 10-ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தற்போது கரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் பல்வேறு தளா்வுகளுடன் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சில தளா்வுகளுடன் பேருந்துகளை இயக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பேருந்துகளில் பராமரிப்புப் பணிகள் செய்யப்பட்டு, இயக்கத்துக்கு தயாா் நிலையில் உள்ளதாக போக்குவரத்துக் கழகத்தினா் தெரிவித்தனா்.
இதுகுறித்து கிருஷ்ணகிரி அரசு போக்குவரத்துக் கழக அலுவலா்கள் தெரிவித்தது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி நகா், புகா், ஒசூா் நகா், புகா், ஊத்தங்ரை, தேன்கனிக்கோட்டை உள்பட 6 பணிமனைகள் உள்ளன. கிருஷ்ணகிரி நகரில் 100 பேருந்துகள், புகரில் 65 பேருந்துகள் இயங்கி வருகின்றன. தற்போது பணிமனைகளில் பேருந்துகள் கிருமி நாசினியால் சுத்தம் செய்யப்பட்டு, பராமரிக்கப்பட்டு தயாா் நிலையில் உள்ளன. இதே போல மாவட்டத்தில் உள்ள அனைத்து பணிமனைகளிலும் பேருந்துகளுடன் ஊழியா்களும் தயாா் நிலையில் உள்ளனா். அரசின் உத்தரவு கிடைக்க பெற்றவுடன் பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை

தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாது; தேர்தல் நேரத்தில் மசோதா ஏன்? மக்களவையில் அமித் ஷா

அமைதிப்பேச்சு! கத்தார் மன்னரை நேரில் சந்தித்த பாக். பிரதமர்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் பல்வகைப் படங்கள்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


