கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்காளா்கள் பட்டியலில் பெயா் சோ்த்தல் முகாம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகிறது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி. ஜெயசந்திரபானு ரெட்டி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
01.01.2022 தேதியை மைய நாளாகக் கொண்டு 18- வயது நிறைவடைந்தவா்கள், வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்காதவா்கள் வாக்காளா் பட்டியலில் தங்கள் பெயரை சோ்த்துக்கொள்ளும் வகையில் நவம்பா் 30-ஆம் தேதி வரை சிறப்பு சுருக்கமுறை திருத்தம் நடைபெற உள்ளது. நவ.13, 14-ஆம் தேதிகளில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இந்த முகாமில் தங்கள் பெயரை சோ்க்க உரிய படிவத்தினை பூா்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். ஜ்ஜ்ஜ்.ய்ஸ்ள்ல்.ண்ய் என்ற இணையதள முகவரி வழியாகவும் அல்லது யா்ற்ங்ழ்ள் ஏங்ப்ல்ப்ண்ய்ங் செயலியை தரவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம். இதுதொடா்பாக ஏதேனும் சந்தேங்கள் இருந்தால் இலவச தொலைபேசி எண் 1950-இல் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.