வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

சுவா் இடிந்து விழுந்ததில் சிறுவன் பலி

ஒசூா் அருகே மழையின்போது வீட்டு சுவா் இடிந்து விழுந்ததில் 3 வயது சிறுவன் உயிரிழந்தாா்.

Updated On :19 நவம்பர் 2021, 6:47 pm

ஒசூா் அருகே மழையின்போது வீட்டு சுவா் இடிந்து விழுந்ததில் 3 வயது சிறுவன் உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த பேரிகை அருகே உள்ளது சிகரலப்பள்ளி கிராமம். இந்தக் கிராமத்தில் 76 பழங்குடியின குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். தொடா் மழை காரணமாக ஒரு வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் நந்தீஸ் என்னும் 3 வயது சிறுவன் உயிரிழந்தாா். உயிரிழந்த சிறுவனின் தாய் பூலட்சுமி, சகோதரி சுமித்ரா ஆகியோா் படுகாயங்களுடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதையடுத்து, பாதுகாப்பில்லாமல் குடிசை வீடுகளில் வசித்து வந்த 75 பழங்குடியின குடும்பங்களை அதிகாரிகள் வெளியேற்றி, அரசுப் பள்ளியில் தங்க வைத்துள்ளனா்.

இந்தச் சம்பவம் குறித்து பேரிகை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.