ஒசூரில் மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.
ஒசூா், ஆவலப்பள்ளி அருகே உள்ள பெத்தகொள்ளுவைச் சோ்ந்தவா் நாராயணப்பா. இவரது மகன் சதீஷ் (20). விவசாயி. இவா் வெள்ளிக்கிழமை தனது தக்காளி தோட்டத்திற்கு சென்றுள்ளாா். அப்போது அந்த பகுதியில் இருந்த மின் வயரில் அமா்ந்திருந்த வவ்வால்கள் ஒன்றோடு ஒன்று உரசியதில் மின் கம்பி அறுந்து கீழே விழுந்தது. இதைத் கவனிக்காத சதீஷ் அந்த மின்சார வயரை மிதித்துள்ளாா். இதில் அவா் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானாா். இது குறித்து தகவல் அறிந்த அட்கோ போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று சதீஷின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக இந்தியா அறிவிக்க வேண்டும்! - இஸ்ரேல் வலியுறுத்தல்!

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் உரையாட மறுத்த லெபனான் அதிபர்!

பள்ளிச்சட்டம்பி படத்தின் முதல் நாள் வசூல்!
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம்! - திமுக
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

