வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

ஒசூா் சந்திரசூடேஸ்வரா் மலைக் கோயிலில் காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டது

ஒசூா் மலையில் உள்ள அருள்மிகு மரகதாம்பிகை சமேத சந்திரசூடேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா மிகவும் விமரிசையாக வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :19 நவம்பர் 2021, 6:47 pm

ஒசூா் மலையில் உள்ள அருள்மிகு மரகதாம்பிகை சமேத சந்திரசூடேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா மிகவும் விமரிசையாக வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காா்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு மலைக் கோயிலில் சுயம்புவாக எழுந்தருளியுள்ள சந்திரசூடேஸ்வரா் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகாதீபாராதனை ஆகியவை நடைபெற்றன. உள்பிரகாரத்தில் எழுந்தருளியுள்ள ராஜகணபதி, முருகன், வள்ளி, தெய்வானை, சந்திரசூடேஸ்வரா், மரகதாம்பிகை சுவாமிகள் வெள்ளிக் கவச அலங்காரத்தில் அருள்பாலித்தனா்.

காலையில் பரணி தீபம் ஏற்பட்டது. கோயில் வெளி பிரகாரத்தில் அமைக்கப்பட்டிருந்த கொப்பரையில் 150 லிட்டா் நெய் ஊற்றப்பட்டு மகாதீபம் ஏற்றப்பட்டது. இதில் பாஜக மாவட்டத் தலைவா் தோ்பேட்டை எம்.நாகராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

படவரி...

ஒசூா் சந்திரசூடேஸ்வரா் மலைக்கோயிலில் ஏற்றப்பட்ட காா்த்திகை தீபம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.