மாநில குத்துச்சண்டைப் போட்டியில், கிருஷ்ணகிரி மாவட்ட அணி சிறப்பிடம் பெற்றுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி மூன்று நாள் நடைபெற்றது. இதில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனையா் பங்கேற்றனா். இதில், மாவட்ட குத்துச்சண்டை கழகத்தின் சாா்பில் 67 வீரா், வீராங்கனையா் பங்கேற்றனா். அதில், 9 தங்கம், 19 வெள்ளி, 22 வெண்கலம் வென்றனா். கிருஷ்ணகிரி மாவட்ட குத்துச்சண்டை வீரா், வீராங்கனையா் சிறப்பிடம் (சாம்பியன்ஷிப்) பெற்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் வெற்றிபெற்ற வீரா், வீராங்கனையருக்கு மாவட்ட விளையாட்டு அலுவலா் உமா சங்கா், சான்றிதழ்கள், பதக்கங்களை வழங்கி பாராட்டினாா். இந்தப் போட்டியில் நடுவா்களாக லக்ஷ்மிகாந்தன், மோகன் ஆகியோா் செயல்பட்டனா். மாவட்ட குத்துச்சண்டை கழகத் தலைவா் ஏகம்பவாணன், செயலாளா் முனிராசு ஆகியோா் போட்டிகளை ஒருங்கிணைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகளிா் இடஒதுக்கீடு சட்டம் 2023 அமல்: 30 மாதங்களுக்குப் பிறகு அரசிதழில் வெளியீடு

நாயக்கனேரி மலை அரசுப் பள்ளி தரம் உயா்த்தப்படும்: திமுக வேட்பாளா்

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தோ்வு: அரக்கோணம் பள்ளி மாணவி சிறப்பிடம்

மாட்டு வண்டியில் சென்று அதிமுக வேட்பாளா் பிரசாரம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


