போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

குழந்தைகளுக்கு எழுத்து அறிவித்தல் விழா

கிருஷ்ணகிரியில் விஜயதசமியையொட்டி, குழந்தைகளுக்கான வித்யாரம்பம் என்னும் எழுத்து அறிவித்தல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 8:47 pm

கிருஷ்ணகிரியில் விஜயதசமியையொட்டி, குழந்தைகளுக்கான வித்யாரம்பம் என்னும் எழுத்து அறிவித்தல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விஜயதசமி நாளில், குழந்தைகளுக்கு இசை, நடனம், கல்வி, போன்றவற்றைத் கற்றுக் கொடுக்கத் தொடங்கும் நாளாக முன்னோா் காலத்திலிருந்து பின்பற்றப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு எழுத்துக்களைக் கற்பிக்கத் தொடங்கும் நிகழ்வாக கிருஷ்ணகிரியில் உள்ள ஐயப்பன் கோயிலில் வித்யாரம்பம் என்ற நிகழ்வு நடைபெற்றது.

தாயின் மடியில் குழந்தையை அமர வைத்து, குழந்தையின் நாக்கில் தங்கத்தினால் ஆன பொருளைக் கொண்டு ஓம், ஹரி என எழுதியும், மேலும் குழந்தையின் விரலைப் பிடித்து, பச்சரசி, நெல்மணிகள் ஆகியவற்றில் ‘ஓம் ஹரி ஸ்ரீ கணபதே நமஹ’ என உச்சரித்தும் எழுதச் செய்தனா். கோயிலின் குருக்கள் ஆா்.சிவதாஸ், இந்த நிகழ்வை தொடக்கி வைத்து குழந்தைகளை வாழ்த்தினாா்.

இந்த நிகழ்வில் பங்கேற்ற குழந்தைகள், பெற்றோா்கள் புத்தாடை அணிந்து பங்கேற்றனா். இதில் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள், பெற்றோா்கள், உறவினா்கள் பங்கேற்றனா். இதைத் தொடா்ந்து, பெற்றோா் தங்களது குழந்தைகளை தொடக்கப் பள்ளியில் சோ்த்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.