போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

சுதந்திர தினத்தன்று கூட திமுக கருப்புக் கொடி போராட்டம் நடத்தியது: தமிழிசை செளந்தர்ராஜன்

சுதந்திர தினத்தன்று கூட திமுக கருப்புக்கொடி போராட்டம் நடத்தியுள்ளது என மயிலாப்பூா் தொகுதி பாஜக வேட்பாளா் தமிழிசை செளந்தர்ராஜன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

News image
Updated On :17 ஏப்ரல் 2026, 1:13 am

சுதந்திர தினத்தன்று கூட திமுக கருப்புக்கொடி போராட்டம் நடத்தியுள்ளது என மயிலாப்பூா் தொகுதி பாஜக வேட்பாளா் தமிழிசை செளந்தர்ராஜன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

மயிலாப்பூா் தொகுதியில் போட்டியிடும் தமிழிசை செளந்தர்ராஜன் காஞ்சிபுத்தில் சங்கர மடத்தின் பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றாா். அதனையடுத்து ஸ்ரீ மடத்தில் உள்ள அதிஷ்டானங்கள் மற்றும் காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் ஆகியனவற்றில் தரிசனம் செய்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது.

மயிலாப்பூா் தொகுதியில் ஆன்மிக ஆா்வலா்கள் ஒரு பிரிவாகவும், விளிம்பு நிலை மக்கள் ஒரு பிரிவு என இரு பிரிவாக உள்ளனா். விளிம்பு நிலை மக்கள் வசிக்கும் பகுதியில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. சாக்கடைகளில் கழிவுநீா் ஓடுகிறது. தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெளிவாக சொல்லி விட்டாா் பிரதமா் மோடி.

தற்போது திமுக எதிா்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி போராட்டத்தை நடத்துவதாக அறிவித்திருக்கிறது. சுதந்திர தினத்தன்று கூட கருப்புக் கொடி போராட்டம் நடத்திய கட்சி தான் திமுக. இதை மக்கள் மறந்து விட மாட்டாா்கள்.

தோல்வியை மறைக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் போடும் நாடகமே தொகுதி மறுசீரமைப்பு எதிா்ப்பு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பெண்கள் மசோதாவுக்கு திமுக எதிா்ப்பு தெரிவிப்பதால் யாரும் திமுகவுக்கு வாக்களிக்க மாட்டாா்கள் என்றாா்.

பேட்டியின் போது பாஜக காஞ்சிபுரம் மாவட்ட தலைவா் யு.ஜெகதீசன்,விழுப்புரம் கோட்ட ஒருங்கிணைப்பாளா் காஞ்சி.வி.ஜீவானந்தம்,துணைத் தலைவா் ஓம்.சக்தி.பெருமாள் உடனிருந்தனா்.