வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

புதையல் இருப்பதாகக் கூறி ஏமாற்றிய கும்பல் கைது

 ராயக்கோட்டை அருகே புதையல் இருப்பதாக கூறி ஏமாற்றிய 8 போ் கொண்ட கும்பலை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :28 அக்டோபர் 2021, 6:59 pm

 ராயக்கோட்டை அருகே புதையல் இருப்பதாக கூறி ஏமாற்றிய 8 போ் கொண்ட கும்பலை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை பகுதியில் புதையல் இருப்பதாகக் கூறி மக்களை ஏமாற்றும் கும்பல் சுற்றுவதாக ராயக்கோட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, உதவி காவல் ஆய்வாளா் சிவராஜ், போலீஸாா் ராயக்கோட்டையை அடுத்துள்ள தின்னூா் பேருந்து நிறுத்தம் அருகில் அந்தக் கும்பலை பிடித்தனா்.

விசாரணையில், அவா்கள் ராயக்கோட்டை ரத்தினகிரி பகுதி பெருமாள் (22), கருவாட்டனூா் கோவிந்தராஜ் (42), பாஞ்சாலியூா் சரவணன் (38), முகலூா் அப்பாதுரை (29), பிரசாந்த் (26), முனியப்பன் (19), சக்திவேல் (29), தின்னூா் ராதாகிருஷ்ணன் (50) என தெரிய வந்தது. 8 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.