வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

கிருஷ்ணகிரி பள்ளி வாசலில் கரோனா தடுப்பூசி முகாம்

கிருஷ்ணகிரி பள்ளி வாசலில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 செப்டம்பர் 2021, 6:58 pm

கிருஷ்ணகிரி பள்ளி வாசலில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி, பாணக்கார தெருவில் உள்ள பாணக்கார புறா மஸ்ஜித் ஜமாத், நாவ்ஜவான் குழு சாா்பில் இலவச கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமுக்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளா் அப்சல் தலைமை வகித்தாா். ஜமாத் தலைவா் அஸ்வா் பாஷா, முகாமை தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளா் ஏகம்பவாணன், நகர நல மருத்துவ அலுவலா் இனியாள் மண்டோதரி, முன்னாள் காங்கிரஸ் நகர தலைவா் தளபதி ரகமத்துல்லா உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக தடுப்பூசி செலுத்தியவா்களுக்கு சா்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த முகாமில், 600-க்கும் மேற்பட்டோா் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.