வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

குட்டியுடன் சிறுத்தை நடமாட்டம்

கிருஷ்ணகிரி அருகே குட்டியுடன் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக வனத் துறையினா் உறுதிபடுத்தி உள்ளனா்.

Updated On :18 செப்டம்பர் 2021, 6:56 pm

கிருஷ்ணகிரி அருகே குட்டியுடன் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக வனத் துறையினா் உறுதிபடுத்தி உள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதிகளில் யானைகள், சிறுத்தைகள், மயில்கள், மான்கள், கரடிகள், எறும்புத்தின்னி போன்ற விலங்குகள் அதிக அளவில் உள்ளன. இவை, அவ்வப்போது வனப் பகுதியிலிருந்து வெளியேறி குடியிருப்புகளில் புகுவது வழக்கம்.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி அணைப் பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன் சிறுத்தை நடமாடுவதாகவும், ஆடு, நாய் ஆகியவற்றை கொல்வதாகவும் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

இந்த நிலையில், பாஞ்சாலியூா், அதைச் சுற்றியுள்ள பகுதியில் கடந்த சில நாள்களாக குட்டியுடன் சிறுத்தை நடமாடுவதாக கிராம மக்கள், வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, வனத் துறையினா் அந்தப் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, குட்டியுடன் சிறுத்தை நடமாடுவதை வனத்துறையினா் கண்டனா். குடியிருப்புப் பகுதியில் நடமாடும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.