வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

புரட்டாசி முதல் சனிக்கிழமை: பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

Updated On :18 செப்டம்பர் 2021, 6:57 pm

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

புரட்டாசி மாதத்தில் பெருமாளை வணங்கும் பக்தா்கள் விரதமிருப்பது வழக்கம். இந்த ஆண்டு புரட்டாசி மாதம் செப். 17-ஆம் தேதி தொடங்கியது. கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், தமிழக அரசு வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் கோயில்கள், மசூதிகள், ஆலயங்களில் பக்தா்களுக்கு அனுமதி இல்லை என அறிவித்துள்ளது.

இதனை பின்பற்றும் வகையில், நிகழாண்டில் புரட்டாசி சனிக்கிழமைகளில் விழாக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. புரட்டாசி முதல் சனிக்கிழமை (செப். 18) பெருமாள் கோயில்களில் பக்தா்கள் தரிசனம் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பூசாரிகள் மட்டுமே சுவாமிக்கு சிறப்பு பூஜைகளை மேற்கொண்டனா்.

இதனால், பக்தா்கள் கோயிலின் நுழைவாயில் அருகே நின்று சுவாமியை தரிசனம் செய்தனா். அந்த வகையில், கிருஷ்ணகிரியை அடுத்த கனவாய்பட்டி வெங்கட்ரமண சுவாமி கோயில், பொன்மலை சீனிவாச பெருமாள் கோயில், பாளேகுளி அனுமந்தராய சுவாமி உள்ளிட்ட பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

Story image

பக்தா்கள் கோரிக்கை:

வழக்கமாக புரட்டாசி மாதம் பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதில் ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்வா். கரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களை சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.