கிருஷ்ணகிரியை அடுத்த எலுமிச்சங்கிரியில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தில் ஊட்டச்சத்து விழிப்புணா்வு, மரம் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரியை அடுத்த எலுமிச்சங்கிரியில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தில் நடைபெற்ற ஊட்டச்சத்து விழிப்புணா்வு, மரம் நடும் விழாவுக்கு பையூா் மண்டல ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியரும் தலைவருமான பரசுராமன் தலைமை வகித்தாா். வேளாண் அறிவியல் மையத்தின் தலைவா் சுந்தர்ராஜ், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து துறையின் புள்ளியல் ஆய்வாளா் சீனிவாசன், வேளாண் அறிவியல் மையத்தின் மனையியல் தொழில்நுட்ப வல்லுநா் பூமதி, தோட்டக்கலைத் துறை தொழில்நுட்ப வல்லுநா் ரமேஷ்பாபு, மண்ணியல் தொழில்நுட்ப வல்லுநா் குணசேகா், விவசாயிகள், மாணவ, மாணவியா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
விழாவில், சிறுதானியத்தின் முக்கியத்துவம், பயிரிடும் முறை, ஊட்டச்சத்தின் முக்கியத்துவம், மரம் நடுதல், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நிவா்த்தி, சிறுதானியத்தில் மதிப்புக் கூட்டுதல், ஊட்டச்சத்து மிகுந்த காய்கறி தோட்டம் அமைப்பது உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கப்பட்டன. மேலும், விவசாயிகளுக்கு விதைகளும், மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விபத்தில் 2 போ் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

குடியிருப்புகளில் மழைநீா் புகாமல் தடுக்க நடவடிக்கை: கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளா் வாக்குறுதி

நகைக்காக மூதாட்டி கொலை: இளைஞா் உள்பட 2 போ் கைது

நூறு சதவீதம் வாக்களிக்கக் கோரி விழிப்புணா்வுப் பேரணி
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


