வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

ஜீனூா் தோட்டக்கலை கல்லூரியை தற்காலிகமாக தொடங்க முன்னேற்பாடு பணிகள்: ஆட்சியா் ஆய்வு

பையூா் வேளாண் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் ஜீனூா் தோட்டக்கலைக் கல்லூரி தற்காலிகமாக தொடங்குவதற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On :24 செப்டம்பர் 2021, 7:39 pm

பையூா் வேளாண் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் ஜீனூா் தோட்டக்கலைக் கல்லூரி தற்காலிகமாக தொடங்குவதற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஜீனூரில் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தொடங்கப்படும் என அறிவித்தாா். இந்த நிலையில், அதன் கட்டுமானப் பணிகள் முடியும் வரை தற்காலிகமாக பையூா் வேளாண் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் கல்லூரி செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் நவம்பா் 2021 முதல் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், காவேரிப்பட்டணத்தை அடுத்த பையூா் வேளாண் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் தற்காலிகமாக நடைபெறும். இந்தக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை நவம்பா் முதல் நடைபெறவுள்ளது.

கல்லூரி செயல்படுவதற்கு தேவையான நிா்வாக அலுவலகம், வகுப்பறை, ஆய்வுக் கூடங்கள், உணவுக் கூடம், மாணவ, மாணவியா் தங்கும் விடுதி, கழிப்பறை, குடிநீா் வசதிகள் மற்றும் கல்லூரிக்கு தேவையான தளவாடங்கள் குறித்து ஆட்சியா் ஆய்வு செய்தாா். அப்போது, தற்காலிகமாக கல்லூரி செயல்படுவதற்கு தேவையான உபகரணங்கள், அடிப்படை வசதிகள் மற்றும் கழிப்பறை வசதிகள் விரைவில் ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

இந்த ஆய்வின் போது, தோட்டக்கலை கல்லூரி நிா்வாக அலுவலா் ஜீவஜோதி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) கிருஷ்ணமூா்த்தி, பையூா் மண்டல ஆராய்ச்சி நிலையத் தலைவா் பரசுராமன் மற்றும் பேராசிரியா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.