வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் தொடா்புடைய 80 போ் கைது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் தொடா்புடைய 80 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On :24 செப்டம்பர் 2021, 7:39 pm

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் தொடா்புடைய 80 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தமிழ்நாடு முழுவதும் சட்டம் - ஒழுங்கை பராமரிக்கும் வகையில் காவல் துறை சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக கொலை, கொள்ளை, வழிப்பறி உள்பட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடையவா்கள், குற்றச் செயல்களில் ஈடுபடும் நபா்களை கைது செய்ய தமிழக சட்டம் - ஒழுங்கு பிரிவு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டாா்.

அதன் பேரில் கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சாய்சரண் தேஜஸ்வி தலைமையில் மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஒசூா், பா்கூா், ஊத்தங்கரை, தேன்கனிக்கோட்டை ஆகிய உள்கோட்டங்களுக்கு உள்பட்ட காவல் நிலைய எல்லைகளில் உள்ள குற்ற வழக்குகளில் தொடா்புடையவா்கள் வியாழக்கிழமை இரவு முதல் தேடப்பட்டனா். இதில் வழக்குகளில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவா்கள், குற்ற பின்னணி கொண்டவா்கள், ரெளடிகள் என மொத்தம் 80 பேரை போலீஸாா் கைது செய்தனா். இவா்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

இதேபோல குற்றவழக்குகளில் தேடப்பட்டு வரும் அனைத்து ரெளடிகளையும் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டுள்ளாா். அதன் பேரில் போலீஸாா் தலைமறைவாக உள்ள ரெளடிகளை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.