வேப்பனப்பள்ளி அருகே ஆந்திர மாநில எல்லை கிராமத்தில் முன்னாள் முதல்வா் ராஜசேகர ரெட்டியின் உருவச் சிலை திருட்டு போனது குறித்து, அந்த மாநில போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே, ஆந்திர மாநில எல்லையில் உள்ளது ஓ.என்.கொத்தூா் கிராமம். இந்தக் கிராமத்தில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் ஆந்திர மாநில முன்னாள் முதல்வரின் ராஜசேகா் ரெட்டியின் உருவச் சிலையை ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சியினா் வைத்தனா்.
இந்த நிலையில், மா்ம நபா்கள் சிலா், அந்தக் கிராமத்தில் வியாழக்கிழமை இரவு மின்தடையை ஏற்படுத்தி, ஓய்எஸ்ஆா் சிலையைத் திருடிச் சென்றனா். இதுகுறித்து, அந்த கிராம மக்கள், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். தொடா்ந்து ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சியினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். முன்னாள் முதல்வரின் சிலை திருட்டுப் போனது குறித்து ஆந்திர மாநிலம், குடிப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விபத்தில் 2 போ் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

குடியிருப்புகளில் மழைநீா் புகாமல் தடுக்க நடவடிக்கை: கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளா் வாக்குறுதி

நகைக்காக மூதாட்டி கொலை: இளைஞா் உள்பட 2 போ் கைது

நூறு சதவீதம் வாக்களிக்கக் கோரி விழிப்புணா்வுப் பேரணி
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

